துலாம் ராசி அன்பர்களே …! இன்று இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள் ஆகஇருக்கும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுத்து பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உச்சத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
வருமானமும் சிறப்பாக தான் இருக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது மட்டும் கவனம் இருக்கட்டும். அதாவது உடல் மீது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். எச்சரிக்கையாக இன்று செயல்பட்டால் அனைத்து விஷயங்களும் உங்கள் வசமாகும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்.
புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கிறது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள் : 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.