துலாம் ராசி அன்பர்களே …! இன்று அன்பானவர்களின் ஆலோசனை நல்வழி காட்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். எதிர்பார்த்த அளவில் பண வரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். கலைத்துறையினர் சற்று பாடுபட்டு உழைக்க வேண்டியிருக்கும். தங்களின் கடின உழைப்புக்கு வெற்றியை கண்டிப்பாக தேடி வரும்.
முதலில் கொஞ்சம் கவனமாக இருங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு உறவினர்களிடமும் சுமூகமான நிலையை நீடிக்கும். வெளியூர் பயணங்கள் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் நல்லபடியாக இருக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். இன்று எதைப் பற்றி சிந்தனை கொள்ளாமல் கொஞ்சம் மனதை ஒருநிலை படுத்துங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுங்கள்.
உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இன்று காதலர்கள் இனிமையான நாளாக இருந்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.