Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பொறுப்புகள் அதிகரிக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

துலாம் ராசி அன்பர்களே …!     வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவை சிறப்பாக இருக்கும். உச்சத்தில் இருப்பவர்கள் உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் மனநிம்மதியைக் கொடுக்கும். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் சிலருக்கு புதிதாக இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். நீங்கள் தெளிவாக இருந்தால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகளை கிடைக்கப் பெறுவீர்கள்.

எதிலும் திட்டமிட்டு செயலாற்றுங்கள் அதன்மூலம் நல்ல காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் வீண் செலவை மட்டும் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பொருட்களை முதலிடு ஏதும் செய்ய வேண்டாம். அதேபோல புதிய முயற்சிகளில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 4

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |