Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ரகசியத்தை யாரிடமும் பேசாதீங்க…. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே …   இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயங்களைப் பற்றி பேசவேண்டாம். அதேபோல உங்களுடைய ரகசியங்களை பற்றியும் பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். இயந்திர பிரிவில் பணியாற்றுபவர்கள் கொஞ்சம் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

வீண் கவலை விலகிச்செல்லும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது மட்டும் தவிர்க்க வேண்டும். தயவு செய்து எந்த வித பஞ்சாயத்துகளிலும் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். கணக்கு வழக்குகளில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதே போல பொது காரியங்களில் ஈடுபடும் போது ரொம்ப கவனம் வேண்டும், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதும் சரியான முறையில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஓரளவுதான் சிறப்பாக உள்ளது. தயவு செய்து உணவில் கண்டிப்பாக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது நல்லது, உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்தால் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |