துலாம் ராசி அன்பர்களே … ! உடல் சோர்வு ஏற்பட்டு நீக்கம் சிலரை பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நண்பர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் உண்டாகலாம் கவனமாக இருங்கள்.
பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பாதியில் நின்று காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வகையில் உதவிகள் இருந்தாலும் அவரிடம் பேசும்போது கவனமாக நடந்து கொள்ளுங்கள். ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் வகையில் நீங்கள் நடந்து கொள்வீர்கள்.
மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.