துலாம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
தான தர்மம் செய்யவும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். இன்று ஓரளவு நன்மை உண்டாகும். பணம் வரவு சீராகவே இருக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் தொடங்குங்கள் காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.