Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எண்ணங்கள் மேலோங்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று நன்மைகள் உங்களை தேடி பெற இறை வழிபாட்டுடன் காரியங்களை தொடங்க வேண்டும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். பொது மக்களின் குறைகளை தீர்த்து வைப்பீர்கள். திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.

கணவன் மனைவிக்கு இடையே எந்த மனக்கசப்பும் மாறும். இன்று வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். இன்று ஆதாயம் நல்லபடியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணங்களும் மேலோங்கும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் செய்வதற்காக சிறு தொகையையும் செலவிட நேரிடும். அதேபோல உறவினர் வருகை இருக்கும். காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

அதேபோல் புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |