Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…நம்பிக்கை கூடும்… காரிய தடைகள் நீங்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று உங்களுடைய செயலில் லட்சிய நோக்கம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டங்களை தீட்டுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் செலவு மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும். எந்த ஒரு விஷயத்திலும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும்.

கல்வியில் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை கூடும். காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அவர்களுடைய காரியங்களில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வார்கள். உற்றார் உறவினரின் தொல்லைகள் மற்றும் இருந்துகொண்டேதான் இருக்கும். காதலர்கள் எதிலும் முன்னேற்றத்தை அடைவார்கள்.

பேச்சில் மட்டும் அவ்வப்போது நிதானமாகவே இருந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |