Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மருத்துவச் செலவுகள் குறையும்…இடமாற்றம் ஏற்படலாம்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழை சேர்க்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினை ஒன்று நல்ல முடிவை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மையை கொடுக்கும். குழந்தைகளுக்கான பொருட்களை இன்று வாங்குவீர்கள்.

இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். புதிய நபரின் தொடர்புகளால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வரவேண்டிய பணமும் வந்து சேரும். இன்று தொழிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இறை வழிபாட்டினால் அனைத்து காரியங்களிலும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4  மாற்றும் 6

அதிஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |