துலாம் ராசி அன்பர்களே …! இன்று சாந்த குணத்துடன் பேசுவீர்கள். செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபாரம் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முழு நேர வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கை துணையுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். செய்தொழிலில் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்காக இன்று முக்கிய முடிவுகளையும் எடுக்கக்கூடும்.
காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது இளம் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம் நீலம் உங்களது அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.