Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…விற்பனை செழித்து ஓங்கும்…செலவுகள் அதிகரிக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று பணம் பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழித்து ஓங்கும். வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு தான் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு பொது காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவரிடம் பணம் பெரும் பொழுதும் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும். நட்பால் ஓரளவு ஆதாயம் இருக்கும். மனம் வருந்தும் படியான சூழல் இருக்கும். கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக தான் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |