Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தன்னம்பிக்கை உண்டாகும்…சலுகைகள் கிடைக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாகவே நடக்கும். காதலர்களுக்கு திருப்தியான சூழல் ஏற்படும்.

தொழில் தொடர்பான காரியங்களில் தாமதமான போக்கு காணப்பட்டாலும் அனைத்து விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். யாருக்கும் நீங்கள் இன்று வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். மற்றவரிடம் உங்களுடைய ரகசியங்களை தயவு செய்து பகிர்ந்து கொள்ளாதீர்கள். கூடுமான வரை பொறுமையாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் வேண்டும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக் கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2 அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |