Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆதாயம் கூடும்…மகிழ்ச்சி அதிகரிக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே …!     எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வழக்கமான பணியில் கவனம் செலுத்தும் வகையில் எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடக்கும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் சந்தோசம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்து மக்களுக்கு உதவி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். உதவிகள் செய்யலாம் ஆனால் அந்த உதவி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். பிரச்சனை இல்லாமல் இருந்தால் செய்யுங்கள். கூடுமானவரை ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று காதலருக்கு ஓரளவு முக்கியமான நாளாக இருக்கும். திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் சிறப்பாகவே நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால்  எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |