Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எதிர்ப்புகள் விலகும்…தெய்வபக்தி கூடும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று வீண்பேச்சு பேசுபவரிடம் விலகியே இருங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகை பணம் பாதுகாப்பில் கவனம் வேண்டும். பய உணர்வு கொஞ்சம் அதிகமாக இருக்கும், தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும்.

அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். நட்பால் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். இன்று தெய்வபக்தி கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். அதற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரலாம். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் காரியங்கள் அனைத்தும் மிக நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |