Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…கவலைகள் நீங்கும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட கையாண்டு அனைவரிடமும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.  மனதில் தெளிவும் நிலைத்து இருக்கும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சங்கடத்தை கொடுப்பதாக இருக்கும். அதை மட்டும் கொஞ்சம் பொறுமையாகவே கையாளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் கொடுக்கும். பிள்ளைகளிடம் தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லது. மனதில் இருந்த பின் கவலை ஓரளவு சரியாகும். அரசாங்கம் மூலம் நடக்கவேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருந்தாலும் எப்போதும் போலவே பேச்சில் நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ள வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |