துலாம் ராசி அன்பர்களே…! இன்று குடும்ப உறுப்பினரின் பாசம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். இன்று எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். வெற்றியும் பெறுவீர்கள்.
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். கூடுமானவரை சேமிப்பதற்கு தயவுசெய்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர் முயற்சி உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். அதுபோலவே இன்று காதலர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.