துலாம் ராசி அன்பர்களே …! உங்களுடைய நேர்மையான எண்ணத்திற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அவர்களிடம் சற்று விலகியே இருப்பது நல்லது. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு முறையற்ற வழிகளில் சென்றால் கஷ்டப்பட நேரிடும். மனைவியின் உறவுகளுக்குள் பகை ஏற்படும். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் அடைவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
உடல் உழைப்பு அதிகமாக இருப்பதால் உடல் சோர்வும் ஏற்படும். வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டியதாக இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயர்வு கவலையில்லை. எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.வாக்குவாதத்தை மட்டும் தயவு செய்து முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
மற்றவர்கள் கூறுவதை கவனித்து அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.