துலாம் ராசி அன்பர்களே…! அனைத்து விஷயங்களிலும் என்று முன்னேற்றம் ஏற்படும். உங்களின் இன்பம் துன்பம் பிறர் அறியாத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் உருவாகும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வீடு வாகனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
உழைத்த உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும். பண வரவு சிறப்பாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மட்டும் செய்யாமல் தீர ஆலோசித்து செய்யுங்கள். முடிந்தால் சிலரிடம் ஆலோசனை கேட்டுப் பெறுவது ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கொஞ்சம் பொறுமையாக தான் நீங்கள் செயல்பட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.