Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தாய்வழி ஆதரவு உண்டாகும்…மகிழ்ச்சி அதிகரிக்கும்…!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று பிடிவாத குணத்தை நீங்கள் தயவுசெய்து தளர்த்திக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொது வாழ்க்கையில் எதிர்பார்த்த படியே சில பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். தாய்வழி ஆதரவு உண்டாகும். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு குறையலாம். வாகனம் வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படும்.

எதையும் செய்யும் முன் தயக்கம் கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். உடலில் எப்போதும் போலவே கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அது போலவே மாலை நேரங்களில் நடைப்பயிற்சி என்பதை கண்டிப்பாக வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒருவனிடம் கூடுமானவரை அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செலவையும் தயவுசெய்து கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

காதலர்கள் இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |