துலாம் ராசி அன்பர்களே…! இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை நாடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சாதகமான பலன்கள் உங்களை தேடி வரக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் வேண்டும்.
மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது எப்போது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். இன்று கூடுமானவரை கொஞ்சம் கவனமாகவே செயல்படுங்கள்.
மாலை நேரங்களில் எப்பொழுது போலவே நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம் மற்றும் பழுப்பு நிறம்.