Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மனஅமைதி கிடைக்கும்…நற்செய்திகள் வரும்…!

 

துலாம் ராசி அன்பர்களே …!    பெண்கள் சிலர் பயனற்ற வகையில் உங்களிடம் பேச்சுக் கொடுக்க நேரிடும். அவரிடம் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சில கோரிக்கைகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். சராசரி அளவில்தான் பண வரவு இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும்.

எடுக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதைச் ஆதாரமாக எடுத்துக் கொள்வது நல்லது. அவரிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலும் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.இன்று காதலர்கள் வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஓரளவே சிறப்பாக இருக்கும். கூடுமானவரை சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது தான் ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |