Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…விட்டுப்போன உறவுகள் வந்து இணைவார்கள்…பயணம் நன்மையை கொடுக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.இன்று  உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயர செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் மூலம் நன்மை இருக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேளைக்கு இப்பொழுது பாராட்டுகளும், அதன் மூலம் சன்மானம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடத்தை எழுதி பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது  மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |