Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேனர்கள் வைத்து… விளக்கு ஏற்றி…. கமலா ஹாரிஸ்சுக்கு வாழ்த்து… ஜோராக கொண்டாடிய கிராமமக்கள்…!!

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக  ஹாரிஸும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது பெருமையை அளித்துள்ளது. கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திரபுரம் மக்கள் விழா கொண்டாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவைகள் ஒட்டப்பட்டுள்ளன. கமலா ஹாரிஸ்காக தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கு ஏற்றி வாழ்த்து தெரிவித்து பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். துளசேந்திரபுரம் கிராம மக்கள் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். கமலா ஹரிஷின் தாய்வழித் தாத்தாவான கோபாலன் என்பவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆங்கிலேயர் காலத்திலேயே சிவில் சர்வீஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

Categories

Tech |