துளசியால் நம் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்..!
*துளசியில் பல வகையானவை உள்ளன. அவை , நல்துளசி , கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி எனபலவற்றை ஆகும்.
* துளசி இலைகளை அவித்து, சாறு பிழிந்து 10 மில்லி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல், ஆகியவற்றை பலப்படுத்தும். இரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும்.
* துளசி இலைச்சாறு 10 மில்லி, தேன் 50 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து காலை, மாலை என இருவேளை 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருதய நோய் குணமாகும்.
* 100 மில்லி துளசி சாறுடன் 20 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்குத் தேய்த்து வர சைனஸ் தொல்லை தீரும்.
*துளசிச்சாறு, வெங்காயச்சாறு, எலுமிச்சைச்சாறு, விளக்கெண்ணெய் இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சி 15 முதல் 10 மில்லி வீதம் உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
*துளசி விதையை பாலில் இட்டு காய்ச்சி குடித்துவர வெள்ளைபடுத்தல், மேக நோய்கள் குணமாகும். கர்ப்பிணி பெண்களும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உட்கொண்டு வந்தால் பிரசவம் எளிதாகா இருக்கும்.