துலாம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முயற்சித்த காரியங்கள் அனைத்தும் வெற்றி காண்பீர்கள். கடன் பயண வாய்ப்புகள் கைகூடும். அழகுப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுநல ஈடுபாட்டுடன் இன்று காண்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இன்று செல்வ நிலையும் உயரும். குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை இருக்கும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாகவே இருப்பீர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே சிறப்பை கொடுக்கும் இருந்தாலும் இன்று நீங்கள் முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது மிகச் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் காவி நிறம்