துலாம் ராசி அன்பர்களே…! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இட மாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசியல் துறையினர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இன்று வீண் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சிறு அலட்சி ஏற்படும், பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களால் மன கஷ்டமும் இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் பொறுமையாக செயல்படுங்கள், வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதேபோல ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இன்று கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.
இன்று பேசும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் கண்டிப்பாக பேச வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்