துலாம் ராசி அன்பர்களே … ! இன்று பணிமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடும்பத்தில் கலகம் கொஞ்சம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டாகும். எதிலும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டியிருக்கும். குடும்பத்தில் செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக இன்று நீங்கள் கடுமையாக பாடுபட்ட வேண்டும்.
நினைத்ததை நிறைவேற்றுவதற்கும் கடுமையாக உழைப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. புரிந்து கொண்டு பேசுங்கள் அதேபோல தூர தேசத்து உறவினர்களால் சிறுசிறு தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். திருமண முயற்சிகள் காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும்.
முடிந்தால் இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும். சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.