கொரோனாவுக்கு மருந்தே கிடைக்காமல் போகலாம் என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உலக நாட்டு அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்காக தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவில் இதற்கான பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று அக்டோபர் முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என அந்நாட்டின் செய்தி தொடர்பாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கொரோனாவுக்கு நிரந்தரமாக மருந்தே கிடைக்காமல் போகலாம். தற்போது கொரோனாவை தடுக்க பல நாடுகளில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்த ஆய்வுகளை ஆராய்ந்து பார்த்ததில், எதிலும் துல்லியமான தீர்வுகள் இல்லை எனக் கூறியுள்ளார்.