Categories
உலக செய்திகள்

‘நான் தான் அடுத்த அதிபர்’…. அனைவரும் ஆதரவு அளியுங்கள்…. ட்விட்டரில் பதிவிட்ட அம்ருல்லா சாலே….!!

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் ஆப்கானில் உள்ள பல்வேறு பகுதிகளை கையகப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் காபூலை கைவசப்படுத்தி நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு விமானம் மூலம் தஜகிஸ்தான் தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவரின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தற்பொழுது ஓமனில் தங்கியுள்ளார். இதனையடுத்து அவர் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் ஆன அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி அதிபராக இருக்கும் ஒருவர் நாட்டை விட்டு வெளியேரினாலோ, தப்பிச் சென்றாலோ, மரணம் அடைந்துவிட்டலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ அந்நாட்டின் துணை அதிபரே அடுத்த அதிபராக பொறுப்பேற்க வேண்டும். அதன் படி தற்பொழுது அஷ்ரப் கனி அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் துணை அதிபராகிய நான் நாட்டின் அதிபராக பதவியேற்க வேண்டும்.  ஆதலால் எனக்கு அனைத்து தலைவர்களும் தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |