தலீபான்கள் சோதனை நடத்தி துணை அதிபர் வீட்டில் இருந்து பண பறிமுதல் செய்யும் காணொளியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டினை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிக்கொண்டு கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை அஷ்ரப் கனி மறுத்து செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசியல் அதிகாரிகளின் வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
Taliban say they have found 6.5M US dollars from @AmrullahSaleh2 house when they were searching. pic.twitter.com/3L1ryVWObT
— Tajuden Soroush (@TajudenSoroush) September 13, 2021
அந்த வகையில் நாட்டின் துணை ஜனாதிபதியான அம்ருல்லா சாலே வீட்டில் இருந்து சுமார் 6.5 மில்லியன் அமெரிக்கா டாலர்களை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த காணொளியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு நான் தான் அதிபர் என்று தலீபான்களுக்கு எதிராக அம்ருல்லா சாலே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.