Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்ககடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் புயலின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், குமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் குமரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். கடலோர பகுதி வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |