14ஆம் தேதியில் இருந்து மேற்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னனை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக அதே பகுதியில் இருக்கிறது. இது வரும் 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும். 16ஆம் தேதி புயலாகவும் மாறக்கூடும். இதனால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 லிருந்து 55 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வரையும் வீசக்கூடும்.
அதே போல 16ஆம் தேதி மத்திய தென் கிழக்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60- 65 கிலோமீட்டர் வரையிலும், அவ்வப்போது 75 கிலோமீட்டர் வரையிலும் கற்று வீசக்கூடும். 17 , 18 தேதிகளில் மத்திய மற்றும் தென் கிழக்கு கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 65 இல் இருந்து 75 கிலோமீட்டர் வரையிலும் அவ்வப்போது 85 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும்.
இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் 14 ஆம் தேதியிலிருந்து மத்திய வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னனை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.