குடிசை வீடு தீ பற்றி எரிந்ததில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த சோழவரம் ரைஸ் மில் தெருவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் மரம் வெட்டும் தொழிலாளியான மணி என்பவர் குடிசை கட்டி அவரது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அருகில் சிம்னி விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த சிம்னி விளக்கை எலி தட்டி விட்டதால் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்து இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மணி கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.