Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தூங்கி கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்”அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கிக் கொண்டிருக்கும்போது இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த கிருஷ்ணவேணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் மனைவி மற்றும் மகளுடன் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து குணசேகரன் இரவு நேரத்தில் கண்விழித்து தண்ணீர் குடிப்பதற்காக  சென்றபோது கிருஷ்ணவேணியின் அறை திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

ஆனால் அங்கு கிருஷ்ணவேணி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிருஷ்ணவேணி கிடைக்கவில்லை. இதனால் குணசேகரன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கிருஷ்ணவேணியை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |