துணிச்சலாக நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி போன்ற சில படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் மகராசி தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருக்கும் கரமனை என்னும் பகுதியில் அவரது குடும்பத்தினருடன் வசிக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருக்கக்கூடிய கோழி கூடு ஒன்றில் திடீரென்று நல்லபாம்பு புகுந்து விட்டது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் இருக்கும் பாம்பு பண்ணைக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் கோழி கூட்டிலும், அதை சுற்றும் முற்றும் தேடி பார்த்தனர்.
ஆனால் பெரிய பாம்பு காணவில்லை என்று, கோழி கூட்டை பார்க்கும்பொழுது உள்ளே பிறந்து சில நாட்கள் ஆன நல்லபாம்பு குட்டி ஒன்று இருந்ததை பார்த்தனர். இந்த பாம்பு குட்டியை பண்ணை ஊழியர்கள் சாமர்த்தியமாக பிடித்தனர். சின்ன குட்டியாக இருந்தபோதிலும் அது படமெடுத்து ஆடியது. இதனால் நடிகை பிரவீணா மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களும் அச்சம் கொண்டனர்.
ஆனால் பண்ணை ஊழியர்கள் குட்டி பாம்பை பார்த்து பயப்படாதீர்கள் என நம்பிக்கை அளித்தனர். பிறகு அந்த குட்டிப் பாம்பை, பிரவீணா கையில் கொடுத்தனர். அவர் லேசான பயம் இருந்தபோதிலும் துணிச்சலாக கையில் வாங்கினார். அவரது கையில் இந்தப்படியே குட்டி பாம்பு படமெடுத்து ஆடியது. அவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ வேகமாக பரவி வைரலாகியது.
இது பற்றி நடிகை பிரவீணா கூறியது; பாம்பை பார்த்தால் கொள்ளவேண்டும் என்ற அணுகுமுறை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/B_fEz1PBte1/