ஜவுளிக் கடையில் திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லமுத்து என்ற மகன் உள்ளார். இவர் ஏர்வாடி நம்பியாறு பாலம் பகுதியில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 13 – ம் தேதி நல்லமுத்து தனது உறவினரான விஜய் என்பவரிடம் கடையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சமயம் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் முத்தையா என்பவர் கடைக்கு வந்து ஒரு பேண்ட், சட்டை எடுத்துள்ளார். இதனையடுத்து முத்தையா கடை ஊழியர்களுக்கு தெரியாமல் 1500 மதிப்புள்ள ஒரு பேண்ட், டீசர்ட் ஆகியவை திருடி சென்றுள்ளார்.
அதன்பின் கடை ஊழியர்கள் இருப்பு துணிகளை கணக்கீடு செய்தபோது பேண்ட், டீசர்ட் திருடு போனது தெரியவந்துள்ளது. அதன்பின் நல்லமுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் முத்தையா துணிகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நல்லமுத்து ஏர்வாடி பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த முத்தையாவை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.