Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணிகரமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கஞ்சாவை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு கார்கள் காவல்துறையினர் நிற்பதைப் பார்த்தும் சற்று தூரத்திலேயே நிறுத்தி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக இரண்டு கார்களையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த கார்களில் மூட்டையில் கஞ்சா இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தில் வசிக்கும் அஸ்வின், ஜாக்கிஸ்டன், சாம்னாஜ் மற்றும் ஆசிர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை கடத்தி சென்று திருச்செந்தூரில் உள்ள ஏஜெண்டுகளின் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அவர்கள் கடத்திச் சென்ற 110 கிலோ கஞ்சாவையும், கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய குற்றத்திற்காக அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |