மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24-ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில், துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகமது கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் ஷீசனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 27-ம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பின், துனிஷா சர்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையில் துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் உரையாடல்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இறந்த துனிஷாவின் தாயார் வனிதா ஷர்மா “ஷீசன் என் மகளை இஸ்லாம் மதத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தினான்.
மேலும் ஹிஜாப் அணியவும் கட்டாயப்படுத்தினான். சூட்டிங் தளத்தில் போதைப் பொருளை ஷீசன் பயன்படுத்தினான். தற்கொலையின் போது ஷீசன் முதலில் ஆம்புலன்சை அழைக்கவில்லை. என் மகளை அவன் கொலை செய்துள்ளான். இதனால் ஷீசன் தண்டிக்கப்படும் வரை நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என குற்றம்சாட்டியுள்ளார்.