Categories
தேசிய செய்திகள்

“துனிஷா சர்மா தற்கொலை வழக்கு”…. முன்னாள் காதலருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. கோர்ட்டு உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் இந்தி சீரியல் நடிகையான துனிஷா சர்மா(21) சென்ற 24-ம் தேதியன்று சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்” என்ற தொடரில் தன் முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் மீது துனிஷா சர்மாவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் சென்ற 25-ம் தேதியன்று நடிகர் ஷீசனை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் ஷீசனை பிரிந்ததன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இவர்களது பிரிவுக்கு டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் துனிஷா-ஷீசன் முகமது கானின் வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று ஷீசனுடன் பழகிவந்த மற்றொரு பெண் பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அப்பெண்ணுடனான உரையாடல்களை ஷீசன் நீக்கிவிட்டார். அப்பெண் யார் என்று கண்டறிந்து அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் ஷீசனின் 4 நாட்கள் போலீஸ் காவல் நேற்று (டிச.28) முடிவடைந்ததை அடுத்து, அவர் தானே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஷீசன் முகமது கானின் காவலை டிச.,30ஆம் தேதி (நாளை) வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது..

Categories

Tech |