பிரபல ஆன்லைன் உணவு நிறுவனம் கோழி இறைச்சிக்கு பதிலாக துணியை வறுத்து பெண்ணிற்கு பார்சல் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அலிக் பெரஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அலிக்கும் அவருடைய மகனும் வறுத்த கோழியை பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தில் ஆடர் செய்துள்ளனர். அதன்படி வீட்டிற்கு பார்சலில் வந்த வறுத்த கோழியை இருவரும் உண்பதற்காக எடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து முதலில் அவருடைய மகன் கோழியை கடித்து சாப்பிட முயன்று முடியாததால் அதனை கைகளால் பிய்த்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் வறுத்த கோழியை பிய்கவோ, வெட்டவோ முடியாமல் இருந்திருக்கிறது. அதன்பின் அவர்களுக்கு அது வருத்த கோழியே இல்லை என்பதும், அது ஒரு துணி என்பதும் தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார். இவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்த வீடியோவை சுமார் 2.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.