படம் முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி சுற்றியது மிகவும் சவாலாக இருந்தது என பிரியாமணி தெரிவித்துள்ளார்
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவாகி கொண்டிருக்கும் விராட பருவம் என்ற படத்தில் நக்சலைட் வேடத்தில் நடித்திருக்கிறார்.இப்படத்தில் நடிகர் ராணா போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியாமணி இப்படம் முழுவதும் குண்டுகள் அல்லாத துப்பாக்கியை தூக்கியப்படி நடித்திருக்கிறார்.
இத்தகைய அனுபவம் பற்றி பிரியாமணி சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.விராட பருவம் படத்தில் தான் முதன்முதலாக துப்பாக்கியை சுமக்கும் காட்சியில் படம் முழுவதுமாக நடித்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் சவால் ஆனதாகவும், புதிய அனுபவமாகவும் இருந்தது. அதுமட்டுமின்றி துப்பாக்கி தூக்குவது எவ்வளவு கஷ்டமாக உள்ளது என்பதை இப்படத்தில் முழுமையாக அறிந்து கொண்டேன் என்று தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.