துப்பாக்கியை சுத்தம் செய்தபோது குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூரில் செயல்படும் நக்சல் தடுப்பு பிரிவில் அதிரடிப்படை வீரராக இருக்கிறார். இந்நிலையில் சந்தோஷ் தன்னுடைய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அதிலிருந்து 2 குண்டுகள் சந்தோஷின் காலில் பாய்ந்தது. இதனால் சந்தோஷ் வலியில் அலறி துடித்தார்.
இதனையடுத்து சந்தோஷ் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற வீரர்கள் அவரை உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சந்தோஷின் காலில் உள்ள குண்டுகளை அகற்ற வேண்டி இருந்ததால் உடனே அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சையின் மூலம் சந்தோஷின் காலில் இருந்த 2 குண்டுகளையும் அகற்றினார்கள். ஆகவே தற்போது சந்தோஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிரடிப்படை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.