அடுக்குமாடி கட்டிடத்தில் மாட்டியிருந்த கர்ப்பிணி பூனையை இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று தரைக்கு வர முடியாமல் மாட்டியுள்ளது. இதனைக் கண்ட இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கர்ப்பிணி பூனையை பத்திரமாக காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். பின்னர் அந்த வீடியோ துபாய் பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியுமான முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் பார்வைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்த அவர் பூனையை காப்பாற்றிய நால்வரையும் பாராட்டி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் பூனையை காப்பாற்றிய நால்வரும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என துபாய் பிரதமருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து துபாய் பிரதமர் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பூனையை காப்பாற்றிய நால்வரின் இரக்க குணத்தை பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் வீதம் பரிசாக கொடுத்துள்ளார்.