Categories
அரசியல்

“நாட்டை விட்டு செல்ல முடியாது”…. தற்காத்துகொள்ள ஆயுதமேந்திய பெண்கள்….உக்ரைனில் பரபரப்பு….!!

ரஷ்யா-உக்ரைன் இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என மேற்கு நாடுகளை சேர்ந்த சில உளவு அமைப்புகள் உக்கிரனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உக்கிரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்கிரைனில் வசிக்கும் பொதுமக்கள் தங்களை ரஷ்யபடைகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் கூறும்போது, “எங்கள் நாட்டு எல்லையில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்து வருவதாக தற்போது வந்துள்ள செய்தி எங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதற்காக நாங்கள் நேசிக்கும் கார்க்கோவ் நகரை விட்டு செல்ல முடியாது. அதே சமயம் எங்களை பாதுகாத்து கொள்வதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |