ஆப்கானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட பன்ஸ்ரீலால் அரிண்டா என்பவர் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். மேலும் 50 வயது தக்க பன்ஸ்ரீலால் அரிண்டா ஆப்கான் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி வழக்கம் போல் தனது கடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அந்த சமயம் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பன்ஸ்ரீலாலை கடத்தி சென்றுள்ளனர்.
மேலும் பன்ஸ்ரீலாலின் குடும்பத்தினர் டெல்லி அருகே உள்ள பரீதாபாத் என்னும் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அவரை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா 2 வாரங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 29 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதன்பின் அந்நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் இருந்து வந்துள்ளார். தற்போது கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு காபூலில் இருந்து விமானம் மூலம் பன்ஸ்ரீலால் அரிண்டா டெல்லி வந்து சேர்ந்தார்.