மத்திய அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் காங்கோவில் அரசுப் படையினருக்கும், பலதரப்பு கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் சில சமயம் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் சில பொதுமக்கள் தங்களுடைய கிராமங்களை விட்டு வெளியேறி ஐ.நா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அமெரிக்காவினுடைய இடுரீ மாகாணத்தில் போடப்பட்டிருக்கும் முகாம்கள் மற்றும் கிராமங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களின் மீது ஏ.டி.எஃ என்ற கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், 25 பேரை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்களை தேடி வருகின்றனர்.