கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் ஹெலிகாப்டரில் வெனிசுலா எல்லைக்கு அருகே சென்றுள்ளார்கள். அப்போது மர்ம நபர்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்கும் போதே மர்ம நபர்கள் அதன் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள்.
இதனால் ஹெலிகாப்டரில் இருந்த ஜனாதிபதி உட்பட 4 பேருக்கும் சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. மேலும் இதுகுறித்த விசாரணையில் கொலம்பிய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கொலம்பிய நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டரின் மீது தாக்குதல் நடத்தியது ELN என்னும் இடதுசாரி அமைப்புகளாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.