Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து இப்படி நடக்கு”, என்ன காரணமா இருக்கும்…? கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவில் 2 மர்ம நபர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்த பொது மக்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதன்படி அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடி கடைக்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென்று மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.

இவர் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவிலிருக்கும் சிகாகோ நகரில் சாலையோரம் பொதுமக்கள் கூட்டமாக நின்றுள்ளார்கள். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று கூட்டமாக நின்று கொண்டிருந்த பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இதில் 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 1 பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பொது மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்தும், அதனை நடத்திய 2 மர்ம நபர்கள் பற்றியும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |