அரசு பொது சேவை மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் அரசு பொது சேவை மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் முககவசம் அணியுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.