மர்மமான முறையில் நகராட்சி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பாண்டியின் மனைவி காவேரி காவல் நிலையத்தில் தனது கணவரை சேகர் என்பவர் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியின் மரணத்தை மர்ம சாவாக கருதப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.